Pages

Subscribe:

Friday, February 3, 2012

யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திக்கு தடையாக காணப்படும் யாழ்.மாநகர சபை- கழிவகற்றல் பொழி முறை

'யாழ்ப்பாணத்தில் 750 மில்லியன் ரூபா செலவில் புதிய நவீன ஹோட்டல் ஒன்று அமைப்பதற்கு இன்றைய தினம் (03) இலங்கையின் பிரதமர் டி.எம்.ஜெயரட்ணம் அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்...'

ஜெட்வெயிங் யாழ்.ஹோட்டல் என்னும் பெயரில் யாழ்.மணிக்கூட்டு வீதியில் 76 அறைகளைக்கொண்டு 14 மாடிகளுடன் 18 மாத காலத்தில் இக்ஹோட்டல் அமைக்கப்படவுள்ளது. என திட்ட அறிமுக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் இக்ஹோட்டலுக்கான அடிக்கல் நாட்டு வைபவமானது யாழ்.நகரில் புதிய தொழில் வாய்ப்புக்களை வழங்கும்' என நிகழ்வில் உரையாற்றிய ஜெட்வெயிங் பிறைவேற் லிமிட்டெற் பணிப்பாளர் கருத்து தெரிவித்தார் .

உண்மையிலேயே யாழ்.நகரில் இவ்வாறானதொரு ஹோட்டல் அமைவதனால் யாழ்ப்பாணத்தில் தொழில் வளங்கள் பெருகும் என்பதோடு சுற்றுலாத்துறையில் பெருமளவில் வளர்ச்சியடையும் என்பதில் எந்தவிதமான சந்தேகங்களும் இல்லை.



ஆனால் இக்ஹோட்டலிருந்து வெளியேறும் கழிவுகளை அகற்ற உரிய பொறிமுறைகள் இல்லையென்பதே இப்போதுள்ள பிரச்சினையாகும். காரணம் யாழ்.நகரில் உள்ள சகல கழிவு நீர் வாய்க்கால்களும் கடந்த 30 வருடங்களாக எந்தவிதமான புனரைமைப்பு பணிகளுக்கும் உட்படுத்தப்படாமல் உள்ளன.

.
குறிப்பான யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல கழிவு நீர் வாய்க்கால்கள் மழை காலங்களில் நீர் செல்ல முடியாதவண்ணம் காணப்படுகின்றன. இது தொடர்பாக அண்மையில் மாநகர சபையில் நடைபெற்ற சபையின் வரவு செலவு திட்ட விவாதத்தின் போது கருத்து கூறிய மாநகர ஆணையாளர் மு.செ சரவணபவ மாநகர சபையின் கழிவு நீர் வாய்க்கால்களை உடனடியாக புனரமைப்பு செய்யாமல் எந்தவிதமான அபிவிருத்தியையும் யாழ்.நகர் முழுமையாக அனுபவிக்க முடியாது என்பதே அதுவாகும்.

அந்தளவிற்கு இவ்வாய்கால்கள் காணப்படும் நிலையில் இக்ஹோட்டல் அமைக்கும் செயற்பாடானது எந்த அளவில் வெற்றியளிக்கும் என்பதோடு எதிர்காலத்தில் எழவுள்ள சுகாதாரம் தொடர்பாக சவால்களை சமாளிக்கப்போகின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அதே நேரம் சுகாதாரத்தை காரணம் காட்டி நடைபெறவுள்ள அபிவிருத்தி திட்டங்களையும் தடை போட முடியாது. எனவே எவ்வளவு மிக விரைவாக மாநகர சபையானது தனது எல்லைக்குட்பட்ட கழிவு நீர் அகற்றும் பொறிமுறையை மாற்றிபுனரைப்பு செய்வதோடு புதிய கழிவகற்றல் செயற்றிட்டங்களையும் அறிமுகம் செய்ய வேண்டும்.

இல்லாது போனால் இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு வரும் புதிய தொழில் முயற்சிகள் முற்றாக செயலிழந்து போகும் என்பதோடு முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிடுகின்றவர்களும் புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க பயப்படுவார்கள்.

குறிப்பாக சிறந்த கழிவகற்ற பொழி முறை இல்லாது போயின் யாழ்ப்பாணத்தின் சொத்தான நன்னீர் கூட பாவனைக்கு உதவாத நீராக மாறி விடும் இதனால் எழும் பிரச்சினைகள் அபிவிருத்தியின்மையினால் ஏற்படும் பிரச்சினைகளிலும் பார்க்க பெரிதாக அமைந்து விடும்.

எனவே மாநகர சபையானது உடனடியாக யாழ்.நகரிலுள்ள கழிவகற்ற வாய்க்கால்களை புனரமைப்பு  செய்வதோடு கழிவற்றல் பொறி முறை ஒன்றை அமைப்பதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்

சிறந்த கழிவகற்றல் பொழி முறை இல்லாமல் மாநகர சபை இவ்வாறா திட்டங்களுக்கு அனுமதிப்பது என்பது எந்தளவுக்கு பொது மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதனால் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் முற்றாக பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது. குறிப்பாக எதிர்காலத்திலும் யாழ்ப்பாணத்திலுள்ள பட்டதாரிகள் வேலையற்றபட்டதாரிகளாகவும் இளைஞர் யுவதிகள் சுரண்டல்களுக்குள்ளாக அடைபட்டு அரை குறை சம்பளங்களுக்கு வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள் என்பது கண்களில் தெரிகின்றது.




"பேனாவிலிருந்து ஒரு தேள்" 
கொட்டிக்கொண்டே இருக்கும்----->>>

No comments:

Post a Comment