Pages

Subscribe:

Wednesday, January 25, 2012

பூம்புகாரில் உள்ள வளமற்ற ஒரு பாடசாலையிலிருந்து...

"நாங்கள் இப்ப தான் இங்க வந்திருக்கின்றோம். விரைவில் எங்களுக்காக கட்டப்படுகின்ற கட்டிடத்திற்கு போய் விடுவோம் தயவு செய்து பேப்பரில போட்டுவிடாதேயுங்கோ நாளைக்கு எங்களுக்கு தான் பிரச்சினையென்று..." தெரிவித்தார் யாழ்.பூம்புகார் தமிழ் கலவன் பாடசாலையின் பெண் ஆசிரியர் ஒருவர் 

அவர் எனக்கு ஒன்றும் புதியவர் இல்லை காரணம் என்னுடைய அலுவலகத்திற்கு அருகில் தான் அவருடய வீடு இருக்கின்றது. அந்த அறிமுகத்தில் தான் அவர் என்னுடன் வந்து கதைத்தார் 


பூம்புகார் கிராமம் யாழ்.நகரிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் 10 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. 1990 ஆண்டு உள்நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தைத் தொடர்ந்து பூம்புகார் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து இப்பகுதியானத முற்றாக உயர்பாதுகாப்பு வலயமாக விளங்கியது 
இதனால் இங்கிருந்த வளங்கள் பாடசாலைகள் கட்டிடங்கள் யாவும் யுத்தத்தினால் அழிவடைந்து விட்டன.இதன் பின்னர் 2010ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தான் இப்பகுதியில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்த அப்பகுதியில் உள்ள தனியார் கட்டிடம் ஒன்றில் இப்பாடசாலை தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டது சுமார் 42 பிள்ளைகளுடன் இப்பாடசாலை இப்போது இயங்கிக்கொண்டிருக்கின்றது

இங்கு அதிபர் உட்பட நான்கு ஆசிரியர் தற்போது கல்வி கற்பித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் வெளியிடங்களிலிருந்து சென்று இப்பாடசாலையில் கற்பிக்கின்றனர். 

இவர்கள் பாடசாலைக்கு வருவதற்கு சுமார் ஒரு மணித்தியாலயலம் தேவையாகவுள்ளது அந்தளவிற்கு உள்ளது இவ்விடத்திற்காக போக்குவரத்து சேவைகள். குறிப்பாக வீதியானது மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. பஸ் சேவைகள் சீரின்மையாகவுள்ளன.இவை தவிர இப்பாடசாலைக்கு என இதுவரையில் எந்த வளமும் ஒதுக்கப்படவில்லை. உள்ள ஒரு சில மேசை கதிரைகளை வைத்து இவர்கள் தமகென உள்ள இரண்டு அறைகளில் மாத்திரமே மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர் 

மழை காலம் தவிர ஏனைய நாட்களில் இங்குள்ள மரங்களுக்கு கீழேயே மாணவர்களை அழைத்து வந்த ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். மாணவர்களுக்கும் கற்பதற்காக கொப்பிகள் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு போதிய வசதிகள் இல்லை என பாடசாலைகயின் அதிபர் தெரிவித்தார் 

இந்நிலையில் யுனிசெப் நிறுவனத்தினால் இப்பாடசாலைக்கு இரண்டு மாடிகளைக்கொண்டு ஒரு கட்டிடம் அமைக்கப்படுகின்றது. வெகு விரைவில் அக்கட்டிடத்திற்கு இப்பாடசாலையை மாற்றவுள்ளதாக அதிபர் மேலும் குறிப்பிட்டார்.


"பேனாவிலிருந்து ஒரு தேள்" 
கொட்டிக்கொண்டே இருக்கும்----->>>


No comments:

Post a Comment