Pages

Subscribe:

Thursday, January 26, 2012

மண்ணாகிப்போன மலரின் வாழ்க்கை! எலும்புக் கூடு தான் மிச்சம்...



யாழ்ப்பாணம்:  தனங்களப்பில் உள்ள பற்றை யென்றலிலுள்ள மண் அணையின் பக்கதிலிருந்து பெண்ணொருவருடைய எலும்புகள் நேற்றைய தினம் (25-01-2012) அன்று மீட்கப்பட்டது. வேட்டைக்குச் சென்றவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவ்வெலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. இதுவரையில் நடைபெற்ற விசாரணைகளின் போது சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த செல்வி அற்புதமலர் வயது 25 என அடையாளங் காணப்பட்டுள்ளார். இவரது மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் பல கருத்துக்களை கூறிவரும் நிலையில் உண்மை தொடர்பாக விளித்துக் கூறமுடியாது விட்டாலும் நடந்த சம்பவங்களைப் பார்க்கின்றபோது இச் செயலை திட்டமிட்ட ஒரு குடும்பல் ஒன்றே செய்துள்ளது. என்று தெளிவாகின்றது.


Wednesday, January 25, 2012

பூம்புகாரில் உள்ள வளமற்ற ஒரு பாடசாலையிலிருந்து...

"நாங்கள் இப்ப தான் இங்க வந்திருக்கின்றோம். விரைவில் எங்களுக்காக கட்டப்படுகின்ற கட்டிடத்திற்கு போய் விடுவோம் தயவு செய்து பேப்பரில போட்டுவிடாதேயுங்கோ நாளைக்கு எங்களுக்கு தான் பிரச்சினையென்று..." தெரிவித்தார் யாழ்.பூம்புகார் தமிழ் கலவன் பாடசாலையின் பெண் ஆசிரியர் ஒருவர் 

அவர் எனக்கு ஒன்றும் புதியவர் இல்லை காரணம் என்னுடைய அலுவலகத்திற்கு அருகில் தான் அவருடய வீடு இருக்கின்றது. அந்த அறிமுகத்தில் தான் அவர் என்னுடன் வந்து கதைத்தார் 

மலசல கூடமின்றி அல்லற்படும் அரியாலை கிழக்கு மக்கள்

அரியாலை கிழக்கில் மீளக்குடியமாந்த மக்கள் மலசல கூட வசதியின்றி அல்லற்பட்டு வருகின்றனர். 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்த இப்பகுதி மக்கள் கடந்த 2011ம் ஆண்டின் ஆரம்பத்தில் தான் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து  தற்போது இப்பகுதியில் 30 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளன.
இவர்களில் எவருக்கும் கடந்த ஒரு வருடமாக மலசல கூடங்கள் அரசாங்கத்தினாலும் சரி தனியார் தொண்டு நிறுவனங்களினாலும் சரி அமைத்துக்கொடுக்கப்படவில்லை.
  இங்கு குடியமர்ந்துள்ள குழந்தைகள் பெண்கள் இதனால் மிகவும் அதிகமாகப்பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கடந்த பருவ மழை காலத்தில் இவர்கள் சொல்லெணா துன்பத்தை அனுபவித்தாக தெரிவித்தனர்

Thursday, January 19, 2012