Pages

Subscribe:

Wednesday, January 25, 2012

மலசல கூடமின்றி அல்லற்படும் அரியாலை கிழக்கு மக்கள்

அரியாலை கிழக்கில் மீளக்குடியமாந்த மக்கள் மலசல கூட வசதியின்றி அல்லற்பட்டு வருகின்றனர். 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்த இப்பகுதி மக்கள் கடந்த 2011ம் ஆண்டின் ஆரம்பத்தில் தான் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து  தற்போது இப்பகுதியில் 30 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளன.
இவர்களில் எவருக்கும் கடந்த ஒரு வருடமாக மலசல கூடங்கள் அரசாங்கத்தினாலும் சரி தனியார் தொண்டு நிறுவனங்களினாலும் சரி அமைத்துக்கொடுக்கப்படவில்லை.
  இங்கு குடியமர்ந்துள்ள குழந்தைகள் பெண்கள் இதனால் மிகவும் அதிகமாகப்பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கடந்த பருவ மழை காலத்தில் இவர்கள் சொல்லெணா துன்பத்தை அனுபவித்தாக தெரிவித்தனர்


இந்நிலையில் இம்மாதம் (கடந்த 20 நாட்களுக்கு முன்னர் ) தான் சமூர்த்தியினால் இப்பகுதி மக்களுக்கு மலசல கூடங்கள் அமைப்பதற்கு 40 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது

ஆனால் இவர்களுக்கு வழங்கப்பட்டஇப்பணம் மலசல கூடங்களை அமைப்பதற்கு போதாது என்று இவர்கள் தெரிவிப்பதோடு ஒரு மலசல கூடத்தை அமைப்பதற்கு 80 ஆயிரம் ரூபா செலவு ஆகும் என்று தெரிவிக்கின்றனர்
இதன் அடிப்படையில் தற்போது 22 மலசல கூடங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளனர். இவற்றில் ஒரு சில மலசல கூடங்கள் முற்றாக அமைக்கப்பட்டிருந்தாலும் ஏனையவை இன்னமும் ஆரம்ப கட்டத்தில் தான்  உள்ளன. குறிப்பாக மலசல கூடங்கள் அமைக்கும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபடுவதை காணக்கூடியதாகவுள்ளது

மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மலசல கூடங்களை அமைப்பதற்கு தேவையான எஞ்சிய 40 ஆயிரம் ரூபாவை புரட்டுவதற்கு மிகவும் அதிகமாக கஸ்ரப்படுகின்றனர்

இவர்கள் அனைவரும் நாளாந்தம் கூலி வேலை செய்துவாழ்பவர்கள் என்பதால் தமக்கு இப்பணத்தை புரட்டுவது மிகவும் கடினமாகவுள்ளதொன்றும் இதற்கு யாராவது உதவி செய்ய வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.






"பேனாவிலிருந்து ஒரு தேள்" 
கொட்டிக்கொண்டே இருக்கும்----->>>


No comments:

Post a Comment